big boss 2 contestents confirmed?

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பிரபலமடைத்த ஓவியா தற்போது தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட, ஜூலி, ரைசா, ஹரிஷ், ஆரவ், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் பிஸியாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இதற்கான விளம்பர வேலைகள் தற்போது நடந்து வருகிறது. மேலும் இது குறித்து நிகழ்ச்சியாளர்கள் மூன்று ப்ரோமோ வெளியிட்டுள்ளனர். 

நடிகர் கமல் நேரடியாக அரசியலில் களமிறங்கிவிட்ட நிலையில் அவரின் கருத்துக்களை கூற ஒரு மேடை, நிகழ்ச்சி கிடைத்ததாக தான் தற்போது பார்க்கப்படுகிறது. 

வருகிற ஜூன் 17ம் தேதி முதல் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதில் கலந்துக்கொள்ள உள்ள பிரபலங்களின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த நடிகை சினேகா மற்றும் ரம்பாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. எனினும் தற்போது ரம்பா கர்பமாக இருப்பதாலும், சினேகா தெலுங்கில் ராம்சரண் படத்தில் கமிட் ஆகியுள்ளதாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பு சம்மதம் தெரிவித்திருந்தாலும் தற்போது கலந்துக்கொள்வது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

மேலும் நடிகர் கிருஷ்ணா, ரியாஸ் கான், வடிவேல் பாலாஜி, ரியோ ராஜ், கலக்க போவது யாரு பாலா, பரத், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்குபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் யார், யார் கலந்துக்கொள்வார்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.