இந்தியில் "முன்னா மைக்கேல்" என்ற படம் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். அதன் பின்னர் தெலுங்கில் அறிமுகமான இவர், "சவ்யாசாச்சி", "மிஸ்டர் மஞ்சு" ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வசூலில் வெற்றிக்கொடி நாட்டவில்லை. 

இந்த சமயத்தில் தான் பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் ராம் நடித்த "ஐஸ்மார்ட் சங்கர்" படம் வசூலில் ஆந்திராவையே அதிரவைத்தது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பூரி ஜெகந்நாத்திற்கும், நிதி அகர்வாலுக்கும் அந்த படம் மிகப்பெரிய தெம்பாக அமைந்தது. 

இந்நிலையில் தற்போது தமிழில் காலடி எடுத்து வைத்துள்ள நிதி அகர்வால். ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்து வருகிறார். ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லட்சுமணன் அப்படத்தை இயக்குகிறார். இந்த சமயத்தில் நிதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று சக நடிகைகளின் வயிற்றெரிச்சலை கிளப்பியுள்ளது. 

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போர்ச்சே என்ற சொகுசு காரை வாங்கியுள்ள நிதி அகர்வால். அவ்வளவு விலை உயர்ந்த சொகுசு காரை நிதி அகர்வால் ஓட்டுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.