'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் விஜய் டிவியில் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி.  தற்போது இவர் நடிகர் பிரஜினுக்கு ஜோடியாக சின்னதம்பி சீரியலில் நடித்து வருகிறார்.  இந்த சீரியலில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பவானி ரெட்டி சின்னத்திரையில் முன்னணி நடிகையாக அறியப்பட்டாலும் வாழ்க்கையில் மிஞ்சியது இவருக்கு என்னமோ சோகங்கள் மட்டுமே. இவர் அவருடன் நடித்த பிரதீப் என்கிற நடிகரை கடந்த 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பின் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய கணவர் பிரதீப் கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இருந்தார் 

இந்த மிகப்பெரிய இழப்பில் இருந்து மீண்ட பவானி ரெட்டி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இதை தொடர்ந்து இவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றோர், ஏற்பாடு செய்தனர்.

தற்போது பவானி ரெட்டி திருமண செய்தி உறுதியாகியுள்ள நிலையில் விரைவில் இவருடைய திருமண செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.