திரிஷாவுக்கு எனது முழு ஆதரவு இப்படியே தொடருங்கள்  , உங்களுக்கு எதிராக போராடுபவர்கள் கோழைகள் என்று திரிஷாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் விஜய் டிவி தொகுப்பாளர் பாவனா 
நடிகை திரிஷா பீட்டா அமைப்பில் இருந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதை திரிஷா கண்டித்துள்ளார். திரிஷாவுக்கு ஆதரவாக விஜய் டிவியின் தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில் நீங்கள் உறுதியாக இருங்கள் திரிஷா , இது போன்று விமர்சிக்கும் கோழைகள்  விளம்பரத்திற்காக தங்களை வெளிப்படுத்தி கொள்ளாமல் மறைமுக அடையாளங்கள் மூலம் தாக்குவார்கள் என்று திரிஷாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.