Asianet News TamilAsianet News Tamil

’உனக்கான காலம் வெகு தூரம் இல்லை'...சீமானுக்கு சி.எம்.ஆசையைத் தூண்டும் பாரதிராஜாவின் பிறந்தநாள் வாழ்த்து...

இடையில் பட நிறுவனமும் துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் அவர் நடித்துள்ள இரு படங்கள் இன்று ஒரே தேதியில் ரிலீஸாகியுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து பேசும் ‘தவம்’ என்ற படத்தில் சமூக அநீதியை எதிர்த்துப்போராடும் வாத்தியாராகவும், ‘மிக மிக அவசரம்’படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.

bharathiraja's birthday wishes to seeman
Author
Chennai, First Published Nov 8, 2019, 12:26 PM IST

இன்று தனது 53 வயதில் அடியெடுத்து வைக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ...உனக்கான காலம் வெகு தூரம் இல்லை...என்று இயக்குநர் பாரதிராஜா  பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.bharathiraja's birthday wishes to seeman

வருங்கால தமிழக முதல்வர் ஆசையுடன் சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலில் களமாடிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 53 வயதில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அவருக்கு வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இடையில் பட நிறுவனமும் துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியிருக்கும் அவர் நடித்துள்ள இரு படங்கள் இன்று ஒரே தேதியில் ரிலீஸாகியுள்ளன. விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து பேசும் ‘தவம்’ என்ற படத்தில் சமூக அநீதியை எதிர்த்துப்போராடும் வாத்தியாராகவும், ‘மிக மிக அவசரம்’படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.bharathiraja's birthday wishes to seeman

இந்நிலையில்  முகநூல் தனது முன்னாள் மாணவரும், இந்நாள் அரசியல்வாதியுமான சீமானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா,...  உனக்கான காலம் வெகு தூரம் இல்லை. எதற்கும் ஆரம்பம், முடிவு என்று காலம் அமையும்.

தமிழ் இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்து வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது...

இன்னும் சில நாட்களில் தமிழ் இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு பிள்ளையே...என்று பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios