Serial actress Roshni | ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி ; வீடியோ உள்ளே!!

பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி தனது செயல் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Bharathi Kannamma Roshini apologized to the fans

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் முன்னிலையில் உள்ளது. இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். தற்போது ரோஷினி மாற்றப்பட்டு, புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.

முன்பு  கண்ணம்மாவாக நடித்த ரோஷினிக்கு இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ரோஷினியை இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மேலும் பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு ரோஷினியின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த சீரியலில்  நடிக்க வேண்டும் என பலரும் ரோஷினிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இதற்கிடையே வெண்பாவாக வந்த பரினா கர்ப்பமாக இருந்தார். அவரது வலை காப்பு வீடியோ சமூக வலைதளத்தில் பெரும்பாலனோர் பார்த்திருந்தனர். இதை தொடர்ந்து நிறை மாத கர்ப்பிணியான பரினா நீருக்கடியில் எடுத்திருந்த போட்டோ ஷுட் அனைவரின் கவனத்தையம் ஈர்த்திருந்தது. வயிற்றில் குழந்தையுடன் தொடர்ந்து பரினா பாரதி கண்ணம்மாவில் நடித்து வந்தார். பிரசவ காலம் நெருங்கியதை ஒட்டி வெண்பா சிறையிலேயே இருப்பது போகின்ற கட்சியை படமாக்கி விட்டு பரினா சீரியலிருந்து சிறுது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தார். ஒரே சமயத்தில் (கண்ணம்மா) ரோஷினி, (வெண்பா) பரினா இருவரும் நாடகத்தை விட்டு விலகியது ரசிகர்ளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. 

நேற்று பரினாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள பரினா ; மகன் என குறிப்பிட்டிருந்தார். பரினாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடகத்திலிருந்து சில முக்கிய காரணங்களால் தான் விலகியதாகவும். அது  உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என நடிகை ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

"

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios