’சாவித்ரி அம்மா வேடத்தில் நான் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவளுடைய எல்லா படங்களையும், பல கிளிப்பிங்கையும் பார்த்தேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் நான் படித்தேன், பின்னர் அவரது மகள் விஜய சாமுண்டேஸ்வரி அம்மாவை சந்தித்தேன், என் கதாபாத்திரத்தை நன்றாக அறிந்து கொள்ள பெரிதும் உதவியவர் அவர்தான்’என்கிறார் ‘மகாநடி’தெலுங்குப் படத்துக்காக தேசிய விருதுபெற்ற கீர்த்தி சுரேஷ்.

தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் ரிலீஸானபோதே கீர்த்தி சுரேஷ் விமர்சகர்களால் அபாரமாகப் பாராட்டப்பட்டு இப்படத்துக்காக அவருக்கு தேசிய விருதே தரலாம் என்று பலரும் எழுதியிருந்த நிலையில் நேற்றைய அறிவிப்பில் அந்தக் கனவு நனவானது குறித்து நெகிழ்ச்சியுடன் காணப்படும் கீர்த்தி சுரேஷ், ’இந்தப் பாத்திரத்தில் நான் தேர்வாவதற்கு முன்பு வேறு சில நடிகைகளையும் இயக்குநர் நாக் சந்தித்தார். அடுத்து தற்செயலாக தனுஷுடன் நான் நடித்த ‘தொடரி’படத்தின் ஒரு காட்சியைப் பார்த்துவிட்டே என்னை சாவித்திரி அம்மா கேரக்டருக்கு உறுதி செய்தார்.

’சாவித்ரி அம்மா வேடத்தில் நான் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவளுடைய எல்லா படங்களையும், பல கிளிப்பிங்கையும் பார்த்தேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் நான் படித்தேன், பின்னர் அவரது மகள் விஜய சாமுண்டேஸ்வரி அம்மாவை சந்தித்தேன், என் கதாபாத்திரத்தை நன்றாக அறிந்து கொள்ள பெரிதும் உதவியவர் அவர்தான். இதற்கு முன் என் அம்மா மேனகா 1981ம் ஆண்டு ரிலீஸான ‘ஒப்போல்’மலையாளப்படத்துக்காக தேசிய விருது வாங்கவேண்டியவர் ஒரு ஓட்டில் தவறவிட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது அம்மா தவறவிட்ட விருதைத்தான் இப்போது நான் வாங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்’என்று பெருமிதம் கொள்கிறார் கீர்த்தி சுரேஷ்.