திரைத்துறையில், நடிகர் நடிகைகள் பலர் மிகவும் தாமதமாகவே தங்களுடைய திருமண வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்கள். அதாவது காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப, லைம் லைட்டில் இருக்கும் போதே முடிந்த வரை சம்பாதித்து கொண்டு பின் திரையுலகில் இருந்து விலக வேண்டும் என எண்ணுகிறார்கள்.

ஆனால் சில சமயங்களில் இவர்கள் தொடர்ந்து நடித்து கொண்டே இருப்பதால், 40 வயதை தாண்டிய பிறகுதான் திருமணம் பற்றிய நினைப்பே வருகிறது. இதனை சில நடிகைகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

இப்படி தான் பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகை சாக்ஷி தான்வார் வாழ்க்கையில் நடந்துள்ளது. இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில்
நடித்து இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் உள்ளது.

 45 வயதாகும் இவர் தற்போதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர்  அவருடைய ஆண் நண்பர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார் என தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை சாக்ஷி மறுத்தார்.

இந்நிலையில் சாக்ஷி  திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு குழந்தைக்கு தாய் ஆகியுள்ளார். அதாவது இவர் 9 மாத குழந்தை ஒன்றை தத்தெடுத்து அதற்க்கு டிட்யா என பெயரிட்டுள்ளார். டிட்யா என்றால் லட்சுமி என்று அர்த்தமாம். மேலும் இவர் எங்கு சென்றாலும் தன்னுடைய குழந்தையை அழைத்தே செல்கிறார். குழந்தையை பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்க்கு இவர் நடித்து வந்த சில சீரியல்களில் இருந்தும் விலகியுள்ளாராம்.