தமிழ் சினிமாவில் ஆடல், பாடல், நடிப்பு என பல்வேறு திறமைகள்ளோடு விளங்குபவர் நடிகர் சிம்பு. இவர் அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம் தான். 

பீப் சாங்:

இந்நிலையில் கடந்த இரண்ட வருடத்திற்கு முன் நடிகர் சிம்பு பாடி, அனிருத் இசையமைத்த 'பீப்' பாடல் ஒன்று சமூகவளைதலத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெண்களை கேவலப்படுத்தும் வகையில் இந்த பாடலில் இடம்பெற்றிருந்த வரிகள் தான் இந்த பிரச்சனைக்கு காரணம். இதனால் சிம்பு மற்றும் அனிருத்தின் இமேஜ் முற்றிலும் மாறிப்போனது.

போராட்டம்:

சிம்பு படிய இந்த பாடலுக்கு மாதர் சங்கம், பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், மற்றும் அரசியல் வாதிகள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். இந்த பரச்சனைக்கு பின் சிம்பு பல நாள் கழித்து தான் வெளியிலேயே தலைக்காட்டினார்.

பத்திரிக்கையாளர்கள் கேள்வி:

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி.ராஜேந்தரிடம் பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இவர் 'பீப் பாடல் விவகாரம் என்பது சிம்பு மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றும். சிம்புவுக்கு அவப்பெயரை ஏற்ப்படுத்த வேண்டும்மென நடத்தப்பட்ட ஒரு போர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

டம்மி வார்த்தைகள்:

பொதுவாகவே இசையமைப்பாளர்கள் டம்மி வார்த்தைகளைப் போட்டு தான் பாடல்களை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி வைத்திருந்த பாடலை யாரோ ஒருவர் எடுத்துச் சென்று வெளியிட்டுவிட்டார். 

அட்மின்:

சிலரின் தூண்டுதலின் பெயரில் ஒரு அட்மின் தான் இந்தப்பாடலை வெளியிட்டார் என்கிற புதுத்தகவலை வெளியிட்டுள்ளார் டி.ராஜேந்தர். 

மைன்ட் வாய்ஸ்:

சிம்பு டம்மி வார்த்தைகளை போட்டு பாடல் பாடுவது தவறில்லை. ஆனால் அவர் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் எந்த ஒரு பிரச்னையும் வந்திருக்காது என்பது தான் உண்மை.