இரண்டு பாடல்களை தொடர்ந்து மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக பீஸ்ட் படக்குழு மாஸ் வீடியோவுடன் அறிவித்துள்ளது.
டாக்டரை தொடர்ந்து பீஸ்ட் :
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தை இயக்கிவுள்ளார் நெல்சன். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நெல்சன் கூட்டணியில் இணைந்துள்ளார். இதில் நாயகியாக பூஜா ஹெக்டேவும், ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
வெற்றி நடைப்போட்ட சிங்கிள்ஸ் :
பீஸ்ட் முதல் சிங்குளாக வெளியான அரபிக் குத்தும் வெளியாகும் முன்னரே ப்ரோமோவும் செம ஹிட் அடித்தது. இதில் அனிரூத், சிவகார்த்திகேயன், நெல்சன் மூவரும் அடித்த லூட்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த பாடல் 30 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
பின்னர் வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை தன் சொந்த குரலில் விஜய் பாடியிருந்தார். ஆனாலும் அரபிக் குத்து அளவிற்கு இந்த பாடல் வெற்றி காணவில்லை.

மேலும் செய்திகளுக்கு...Vijay fans: பீஸ்ட் படம் சிக்கல்...சாலை மறியலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி...
ட்ரைலர் ரிலீஸ் :
சமீபத்தில் வெளியான ட்ரைலர் மூலம் ..இப்படத்தில் நடிகர் விஜய், வீர ராகவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பயங்கரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படும் வணிக வளாகத்தில் உள்ள பொதுமக்களை நாயகன்மீட்பதே இந்த படத்தின் கதைக்களமாகும்..
மேலும் செய்திகளுக்கு...'தனுஷ் என்னை காதலித்தார்'..புது குண்டை போடும் பிரபல நடிகை...
மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் :
இந்நிலையில் நாளை மூன்றாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிரூத் இசையமைப்பில், விவேக் வரிகளில் இந்த பாடல் உருவாகியுள்ளதாக கூறப்படுள்ளது. முந்த சிங்கிள்ஸ், ட்ரைலர் கிளிப்சுடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
