Asianet News TamilAsianet News Tamil

65% அப்லோடான 'பீஸ்ட்' ..இன்று மாலை வெளியாகும் மாஸ் அப்டேட்..

'பீஸ்ட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Beast new update to be released today evening ..
Author
Chennai, First Published Feb 7, 2022, 1:12 PM IST

தளபதி பட அப்டேட் என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான். அடுத்தடுத்து அதிரடி படங்களை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வரும் விஜய் 'மாஸ்டர்' படத்தில் வாத்தியாராக தோன்றி மாஸ் காட்டி இருந்தார். கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் 'பீஸ்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார்.  ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி  உள்ளது.

VIJAY 66 MOVIE UPDATE..

இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கேரக்டர் குறித்த தகவல் லீக்காகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் இயக்குனர் செல்வராகவன் அரசியல்வாதியாக நடித்துள்ளாராம். இது ஒரு ஜாலியான கேரக்டராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

selvaraghavan character in Beast movie leaked

பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, பூஜா ஹெக்டே என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதற்கிடையே விஜய் தனது 66 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்கவுள்ள வம்சி பைடிபல்லி தமிழுக்கு புதிய  இயக்குனர் இல்லை. இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நாகார்சூனா, கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படம் முழுக்க முழுக்க எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாகவே இருந்தது. அதோடு வம்சி இயக்கத்தில் வெளியாகியா பிருந்தாவனம், மகரிஷி உள்ளிட்ட படங்கள் எமோஷன் சார்ந்த கதைக்களத்தையே கொண்டிருந்தன. அதன்படி விஜயின் 66 திரைப்படமும் கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

producer  Dilraj open speech about Vijay 66 story..

இந்நிலையில் விஜயின் 'பீஸ்ட்' திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் பீஸ்ட் மோட் ஆன் என குறிப்பிடப்பட்டுள்ளது..மேலும் புல்லட் நிரப்பப்படும் துப்பாக்கியில் 65% அப்லோடட் என குறிப்பிடப்பட்டுள்ளது..

Follow Us:
Download App:
  • android
  • ios