Beast Update : பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இல்லை என வெளியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த மாதம் ரிலீஸ்

நெல்சன் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாசமே எஞ்சி உள்ள நிலையில், படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் மவுனம் காத்து வந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் கேட்ட அப்டேட்

அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் இல்லை என அண்மையில் வெளியான செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் பீஸ்ட் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பீஸ்ட் அப்டேட்டாவது விடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

வருகிறது ஜாலியோ ஜிம்கானா

இந்நிலையில், ரசிகர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க, பீஸ்ட் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் இரண்டாவது பாடல் வருகிற மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜாலியோ ஜிம்கானா என தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார். இப்பாடலுக்கு அனிருத்,விஜய், நெல்சன் ஆகியோர் டான்ஸ் ஆடும் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... Beast Update : என்ன நண்பா ரெடியா... நெல்சன் போட்ட ‘பீஸ்ட் அப்டேட்’ டுவிட்- பார்த்ததும் குஷியான விஜய் ரசிகர்கள்

Scroll to load tweet…