Asianet News TamilAsianet News Tamil

Beast First Single : வாவ்..ட்ரெண்டாகும் பீஸ்ட் முதல் சிங்கிள்.. எப்ப ரிலீஸ் தெரியுமா?

Beast First Single : விஜய் ட்ரம்ஸ் வாசிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் நாளை பீஸ்ட் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது.. இது குறித்து விஜய் ரசிகர்கள்  #BeastFistSingle ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Beast First Single trending now..
Author
Chennai, First Published Jan 10, 2022, 12:37 PM IST

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும்  இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் 'பீஸ்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார்.  ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி வரும் இந்த படம்  வரும் ஏப்ரலில் திரைக்கான உள்ளது.

இந்தபடத்திலிருந்து விஜய் ட்ரம்ஸ் வாசிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் நாளை பீஸ்ட் முதல் சிங்கிள் தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது... இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது..இது குறித்து விஜய் ரசிகர்கள்  #BeastFistSingle ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Beast First Single trending now..

இதற்கிடையே விஜய் தனது 66 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்கவுள்ள வம்சி பைடிபல்லி தமிழுக்கு புதிய  இயக்குனர் இல்லை. இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நாகார்சூனா, கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படம் முழுக்க முழுக்க எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாகவே இருந்தது. அதோடு வம்சி இயக்கத்தில் வெளியாகியா பிருந்தாவனம், மகரிஷி உள்ளிட்ட படங்கள் எமோஷன் சார்ந்த கதைக்களத்தையே கொண்டிருந்தன. அதன்படி விஜயின் 66 திரைப்படமும் கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios