நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட பின் அவர் எங்கு இருக்கிறார், யாரோடு இருக்கிறார் என்கிற எந்த ஒரு தகவலும் வெளியிட படாமலேயே இருந்தது.
இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசன், பாவனா தன்னுடன் உள்ளார் என்றும் அவர் தற்போது எந்த விதமான மனநிலையில் உள்ளார் என கூறியுள்ளார்.
தொடர்ந்து கூறிய அவர் இந்த நிகழ்விற்கு பின் பாவனா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும், பின் குற்றவாளிகள் கைது செய்ய பட்ட பின் தற்போது அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.
அதே போல் தொடர்ந்து அவருக்கு தைரியம் கொடுக்கும் வகையில், இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மற்றும் குடுபத்தினர் தொடர்ந்து ஆறுதல் கூறி வருவதால் விரைவில் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வார் என கூறியுள்ளார் ரம்யா நம்பீசன்....
