நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய முக்கிய குற்றவாளியுடன், கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் டிரைவர் சேதுவிற்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெரும்பாலும் மலையாள திரையுலகினர் அனைவரும் தங்களுடைய கார் டிரைவர்களை அடியாட்களை போலவே தேர்தெடுத்து தங்களுடைய பாடி கார்ட்டாகவும் பயன் படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை நயன்தரவின் கார் டிரைவர், சேது என்பவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி வெளியில் வந்தவராம், மேலும் அவர் மீது ஒரு அடி தடி புகாரும் உள்ளது என கூறப்படுகிறது.

மேலும் தற்போது நடிகை பாவனாவை கடத்தி, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய அவரது கார் டிரைவர் பல்சர் சுனிலுக்கும், நயன்தாரா கார் டிரைவர்ருக்கும் ஏற்கனே தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் பாவனாவின் கடத்தலுக்கும் நயன்தாரா கார் டிரைவர் சேதுவிற்கும் சம்மந்தம் உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது , ஆகவே இவரையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .