கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் மக்களையும், பிரபலங்களையும், அச்சுறுத்தி வருகிறது என்றால், உடல் நல குறைவு காரணமாக அடுத்தடுத்த சில, முக்கிய பிரபலங்கள் மரணமடைவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம் மக்களையும், பிரபலங்களையும், அச்சுறுத்தி வருகிறது என்றால், உடல் நல குறைவு காரணமாக அடுத்தடுத்த சில, முக்கிய பிரபலங்கள் மரணமடைவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் புற்று நோய் காரணமாக, சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், மற்றும் நடிகர் இர்ஃபான் ஆகியோரின் மறைவு பாலிவுட் திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்தது. மேலும் ஹாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரை கொரோனா வைரஸ் பதம் பார்த்து வகிறது.

அந்த வகையில் தற்போது, உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஜோயல் ஸ்குமாச்சர் தற்போது புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். ஆடை வடிவமைப்பாளராக இருந்து, பின் இயக்குனராக உருவெடுத்து, உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த, பேட்மேன் பார்எவர் (Batman Forever) மற்றும் பேட்மேன் அண்ட் ராபின் (Batman & Robin) போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். 

நியூ யார்க் நகரில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்த இவர் சில வருடங்களாக புற்று நோய் காரணமாக அவதி பட்டு வந்தார். 80 வயது ஆகும் இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி உலகெங்கும் உள்ள பேட்மேன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பேட்மேன் பார்எவர் (Batman Forever) திரைப்படம் உலக அளவில் மிக பெரிய வெற்றி பெற்றது மட்டும் இன்றி, 300 மில்லியனுக்கு மேல் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தாது. இவருக்கு பலர் சமூக வலைதளத்தின் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.