barathiraja drink and dance with young girls
பல இயக்குனர்களுக்கு குருவாக விளங்குபவர் இயக்குனர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா. இவர் இளம் பெண்களுடன் குடித்து விட்டுக் குத்தாட்டம் போடுவது போல் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் அதிர்சியாக்கியுள்ளது.
இயக்குனர் இமையம் பாரதிராஜா:
பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம்மான இவர், படங்களில் கூட கலாச்சாரத்தையும் கட்டுப்பாட்டையும் உள்ளே புகுத்தி சொல்லும் இயக்குனர். இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் படைப்புகளாக மட்டுமே இருக்கும். இவர் சிறந்த இயக்குனர் மட்டும் இன்றி, எழுத்தாளர், தயாரிப்பாளர், என பல்வேறு பரிமாணங்களில் அறியப்பட்டவர்.
பாரதிராஜாவின் சிஷ்யர்கள்:
குட்டு வாங்கினாலும் மோதிர விரலால் குட்டு வாங்கு என்று ஒரு பழமொழி உண்டு, அப்படி இவருடைய மோதிரவிரலால் குட்டு வாங்கிய பல துணை இயக்குனர்கள் இன்று நடிகர்களாகவும், சிறந்த இயக்குனர்களாகவும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள்.... இயக்குனர் பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லெட்சுமணன், மனோஜ் குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை ஆகியோர்.

பாரதிராஜாவின் குத்தாட்டம்:
தற்போது தமிழில் ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான 'ஒரு கிடாய்யின் கருணை மனு', மற்றும் கடந்த வாரம் வெளியான 'படைவீரன்' ஆகிய படங்களுக்கு ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
இந்நிலையில் இவர் ஒரு சில பெண்களுடன் குடித்து விட்டு செம குத்தாட்டம் போடுவது போல் வெளியாகியுள்ள வீடியோ... இது பாரதி ராஜாவா? என வாய் பிளக்கும் அளவிற்கு அனைத்து ரசிகர்கள் மட்டும் திரையுலகினரை அதிர்சியாக்கியுள்ளது.
