சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ஒரு குரு என்றால் இவர்களுக்கு இன்னொரு குருவாக திகழ்ந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 

மூவரும் இணைந்து உருவாக்கிய '16 வயதினிலேயே' திரைப்படம் தமிழ்த்திரையுலகில் அவர்கல் இருவருக்கும் மிக பெரிய மையில் கல்லாக அமைந்தது. மேலும் பாரதிராஜா, கமல்-ரஜினி இருவரையும் தனித்தனியாகவும் இயக்கி வெற்றி படங்களை கொடுத்துள்ளார்

இந்த நிலையில் பாரதிராஜா தற்போது திரைப்பட கல்லூரி ஒன்றை தொடங்கவிருக்கின்றார். இந்த கல்லூரியின் திறப்பு விழாவில் ரஜினி-கமல் ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கப்படவுள்ளது.

மேலும் பாரதிராஜாவின் திரைக் கல்லூரியில், இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம், பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சுஹாசினி, ராதா, ராதிகா, மனோபாலா உள்ளிட்டோரும் கௌரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாலுமகேந்திராவின் 'சினிமா பட்டறை' அவர் மறைந்த பின்னர் சரியாக செயல்படாத நிலையில் இந்த கல்லூரி, புதியதாக திரைத்துறையில் நுழைபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.