barani walk out big boss home
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்பு தொடர்ந்து கரம் வைத்து நடிகர் பரணியை குறை கூறிக்கொண்டு இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் வாய் தகராறு முற்றி அடிக்கவும் சென்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரமோவில், நடிகர் பரணி கஞ்சா கருப்பு முதுகில் குத்துகிறார் என்று ஒரு பேச்சு வருகிறது. அதற்கு கஞ்சா கருப்பு பிக் பாஸில் தான் முதுகுல குத்துற இங்கயுமா என கேட்க, பரணிக்கு மிகவும் கோபம் வருகிறது.
இதனால் பரணி நான் ஏன் அண்ணா உங்க முதுகுல குத்தணும் நீங்க யாரு என கேட்க, அதற்கு சினேகன் நடிக்காதே என பரணியை பார்த்து சொல்கிறார். அதையடுத்து பிக் பாஸ் கன்ஃபஷன் அறையில் கண் கலங்கியவாறு இனிமேல் என்னால் சுத்தமா முடியவில்லை என கூறியவாறு பேசுகிறார் பரணி.
இதுவரை கேமராவின் முன்னிலையில் மட்டுமே மற்ற போட்டியாளர்கள், இங்கிருந்து கிளம்புவதாக கூறிய நிலையில் பரணி முதல் முறையாக கன்ஃபஷன் ரூமில் இப்படி கூறி அழுவது இந்த வாரத்திற்கான எலிமினேஷன் இவராக கூட இருக்கலாம் என தெரிகிறது.
