barani irritating talk to julee
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க பட்டதில் இருந்து, பலரும் ஜூலியை தான் டார்கெட் செய்தனர். ஆனால் இவர் ஆளுக்கு தகுந்தாற்போல் நடந்து வருவதால் இப்போது அனைவருடைய பார்வையும் பரணி மேல் பாய்ந்துள்ளது.
பரணியை வாட்டி வதக்கி வந்த காயத்திரி ரகுராம், பரணியை அழைத்து நீ அனைவரிடமும் அன்பாக பேசு குறிப்பாக கஞ்சா கருப்பு அண்ணனிடம் பொன்னான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என சொல்கிறார். மேலும் பேசும் போது சாரி, தேங்க்ஸ் இது போன்ற வார்த்தைகளால் பேசு என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்படுகிறார்.
அடுத்ததாக பரணியை தேடி, டபுள் கேம் ராணி, ஜூலி வந்து அண்ணா உங்கள் நல்லதுக்காக நான் உங்களிடம் சில நிமிடம் பேச வேண்டும் என கூற, அவர் பேசிய எதையும் கவனிக்காமல் தான் தண்ணீர் குடிக்க போவதாக கூறி அங்கிருந்து கிளம்புகிறார் .
உடனே ஜூலி அண்ணா நீ இப்படி நடந்து கொண்டால் நான் இனி மேல் உன் மூஞ்சிலேயே முழிக்கமாட்டேன் என கூற, உடனே ஜூலியிடம் நீ என் மூஞ்சிலேயே முழிக்காதே என கூறி கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார் பரணி.
