தன்னை பிடித்தவர்களுக்கு "அன்பானவன்" தன்னை அழிக்க நினைக்கும் மனிதர்கள் இடையில் "அடங்காதவன்" எதிர்ப்புகளை, தோல்விகளை கண்டு என்றும் "அசராதவன்" அஜித்தை புகழ்ந்து ரசிகர்கள் எழுதியது மட்டுமல்ல உண்மையாகவே ரசிகர்களை தனது சுயலாபத்திற்காக பயன்படுத்தாத ஒரு மாமனிதனின் சுயரூபம். இப்படிப்பட்ட நடிகனுக்கு விஸ்வாசமாக இருக்கும் ரசிகர்கள் அளப்பறையான பிரமாண்ட கட்டவுட், பேனர் என ஒவ்வொன்றும் புதுமையாக செய்து வருகிறார்கள்.

விஸ்வாசம் படத்திற்காக உலகில் உள்ள அத்தனை அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கான கொண்டாட்டங்களை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். ரசிகர்களும் எங்கு பார்த்தாலும் போஸ்டர், பேனர், கட் அவுட் என அதகளம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் தாண்டி தற்போது அஜித் ரசிகர்கள் செய்துள்ள செயல் சமூக வளையதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தற்போது திருச்சியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் 108 அடியில் போஸ்டர் ஒட்டி அப்பகுதியையே அதிர வைத்துள்ளனர். அதே போல இலங்கை மட்டக்களப்பு 75 feet கட்டவுட் ரெடி.

அதுமட்டுமல்ல "இப்படியும் ஒரு வித்தியாசமான ஓவியம் பன்ன முடியுமா???. ஆமாம் பிளாஸ்டிக் பாட்டில்களில் "அஜித் ஓவியம்! என்ன ஒரு அற்ப்புதம்! எல்லாம் அஜித் ரசிகர்களின் விஸ்வாசம் என சொல்லலாம்.