Asianet News TamilAsianet News Tamil

சண்டை,சச்சரவுகள் இல்லாமல் நடந்த நடன இயக்குநர் சங்கத் தேர்தல்

நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் சங்க தேர்தலில் தலைவராக'ஒரு குப்பைக்கதை’ பட ஹீரோவும் தேசிய விருதுபெற்றவருமான  தினேஷ் மாஸ்டர் 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சண்டை, சச்சரவுகள், கோர்ட் வழக்குகள் இன்றி இத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

bancer union election
Author
Chennai Domestic Airport, First Published Jul 15, 2019, 10:35 AM IST

நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர் சங்க தேர்தலில் தலைவராக'ஒரு குப்பைக்கதை’ பட ஹீரோவும் தேசிய விருதுபெற்றவருமான  தினேஷ் மாஸ்டர் 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சண்டை, சச்சரவுகள், கோர்ட் வழக்குகள் இன்றி இத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.bancer union election

சினிமா தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று மிக அமைதியான முறையில் நடந்தது. சென்னை தியாகராயநகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், இரண்டு இணை செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ் மற்றும் தினேஷ் போட்டியிட்டனர்.துணை தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் லலிதா ஷோபி மற்றும் சுஜாதா போட்டியிட்டனர். நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் வாக்களித்தனர். bancer union election

இந்நிலையில் நடன இயக்குனர் சங்க தேர்தலில் தலைவராக தினேஷ் மாஸ்டர் 75 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  மொத்தம் 322 வாக்குகள் பெற்று தினேஷ் வெற்றிபெற்றார். ‘ஒரு குப்பைக்கதை’என்ற படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகி வெற்றி பெற்றவரான தினேஷ் தான் நடன இயக்கம் செய்த சில முக்கியமான படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’படத்துக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios