baloon director try to sucide for jai
நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடித்து இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பலூன். இந்தப் படம் மிகவும் தாமதமாக வெளியானதால் தற்போது வெற்றி பெற்றாலும் கூட தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் ஜெய் மீது புகார் அளித்துள்ளனர். அதில் ஜெய் தினமும் குடித்துவிட்டு ஷூட்டிங்குக்கு வந்ததால், படத்தின் படப் பிடிப்பை இயக்குனர் சரியாக எடுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், உழைப்பு, தொழில் மேல் அக்கறை, மரியாதை, ஒழுக்கம், கொடுத்த வாக்கை கடைப்பிடிப்பது போன்ற அனைத்திற்கும் நேர் எதிரானவர் 'நடிகர் ஜெய்' என்றும், அவர் சூட்டிங் ஸ்பாட் முதல் டப்பிங் வரை கொடுத்த பிரச்சனையின் காரணமாக இயக்குனர் சினிஷ் கொடைக்கானலில் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் மன நிலைக்குத் தள்ளப்பட்டார். அதற்கு தயாரிப்பாளர் மற்றும் இதர கலைஞர்கள் அனைவரும் சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கொடைக்கானலில் நடிகை அஞ்சலிக்கு வலிப்பு வந்ததாகப் பொய் கூறி அங்கே குழப்பம் செய்து படப்பிடிப்பை தொடர முடியாமல் போனது. படப்பிடிப்பின் போது, தினமும் மீண்டும் ஹோட்டல் ரூம் சென்று எப்போது குடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்ததால் படப்பிடிப்பில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது. இப்படி இவரால் இழப்புகள் மட்டும் 1 .5 கோடிக்கு மேல் ஆனது என பல புகார்களை அடுக்கடுக்காகக் கூறியுள்ளனர்.

.jpg)
.jpg)
.jpg)
