பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் குடும்பத்தினருடன் காட்டும் பாசப்பிணைப்பினை பார்த்து உருகி போயிருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள். இந்த ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் நல்ல பெயரை எடுத்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பாராட்டும் படியான ஒரு டாஸ்க் என்றால் அது இந்த ஃப்ரீஸ் டாஸ்க் தான்.


இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பிரமோவின் போது ஐஸ்வர்யாவின் அம்மா பிக் பாஸ் வீட்டினுள் வந்து பாலாஜியிடம் கண்கலங்கி மன்னிப்பு கேட்ட தருணங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது வந்திருக்கும் இரண்டாவது பிரமோவின் போது டேனியின் குடும்பத்தினர் அவரை காண வந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

 
இதனிடையே பாலாஜி ஜனனியை பற்றி மும்தாஜிடம் குறை கூறும் கட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. பாசப்போராட்டத்தால் நெகிழ்ச்சியான தருணங்களால் இது பிக் பாஸ் வீடு என்பதை யாரும் மறந்துவிட கூடாது என நிரூபிக்கும்படி இடம்பெற்றிருக்கிறது பாலாஜி மும்தாஜிடம் பேசும் காட்சிகள்.

ஜனனி குறித்து பேசிய பாலாஜி ஜனனி தன்னுடைய குடும்பத்தினரை கண்டபோது மகிழ்ச்சி அடைந்தது போல மற்றவர்களை கண்டபோது நடந்து கொள்ளவில்லை. அவருக்கு மற்றவர்களின் குடும்பத்துடன் ஒட்டுதல் இல்லாதது போல தான் இருக்கிறது. நீலிக்கண்ணீருக்கும், போலிக்கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கிறது என கூறி இருக்கிறார்.


ஏற்கனவே முதலைகண்ணீர் விடுகிறார் ஜனனி என யாஷிகா அவார்ட் கொடுத்ததையே சகித்து கொள்ள முடியாத ஜனனிக்கு , பாலாஜி இப்படி பேசியது தெரிந்தால் அவ்வளவு தான்.. அது சரி அந்த வேலையை எல்லாம் தான் இந்த வாரம் குறும்படத்தில் நம்ம பிக் பாஸ் பார்த்து கொள்வாரே.