Asianet News TamilAsianet News Tamil

கேப்டனின் மரணம்.. அஜித் போனில் கூட துக்கம் விசாரிக்கல - மனம் நொந்து பேசிய பிரபலம்!

Ajith Kumar : பிரபல நடிகர் மற்றும் தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

Balaji prabhu opens up that ajith not paying final respect for vijayakanth ans
Author
First Published Aug 26, 2024, 6:41 PM IST | Last Updated Aug 26, 2024, 6:41 PM IST

கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் உடல் நலம் குன்றியிருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 71. தமிழ் திரை உலகத்தை மட்டுமல்லாமல், அரசியல் களத்திலும் கேப்டனின் மறைவு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது. திரை கலைஞர்களும், அரசியல் தலைவர்களும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

அப்போது கேரளாவில் தனது "வேட்டையன்" திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்தின் மறைவை குறித்து கேட்டதும், உடனடியாக தனது படபிடிப்பு பணிகளை நிறுத்திவிட்டு, அடுத்த நாளே நேரில் வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதே போல தன்னை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து, தனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்த விஜயகாந்தின் மறைவுக்கு, நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் தளபதி விஜய். 

இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை கொண்ட நடிகை இவங்க தான்! பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இல்ல!

ஆனால் அதே நேரம் சூர்யா, சிம்பு உட்பட பல முன்னணி நடிகர்கள் சென்னையில் இல்லாத காரணத்தினால் சில நாள்கள் கழித்து அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தும், மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை. ஆனால் அவர் போன் மூலமாக பிரேமலதாவை தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார் பிரபலம் ஒருவர், பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பாஸ்கரின் மகன் தான் பாலாஜி பிரபு. அண்மையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில், தமிழ்த்திரை உலகை பொறுத்தவரை தேவைப்படும் அனைவருக்கும் வாரி வாரி வழங்கி உதவிகளை செய்த மாமனிதன் விஜயகாந்த். அவருடைய மறைவு மிகவும் கொடியது, ஆனால் அவருடைய மறைவுக்கு பல முக்கிய நடிகர்கள் நேரில் வரவில்லை. 

Balaji prabhu opens up that ajith not paying final respect for vijayakanth ans

குறிப்பாக நடிகர் அஜித், நான் சொல்லப்போகும் விஷயத்தை கேட்டால் அஜித் ரசிகர்கள் என் மீது கோபப்படுவார்கள். இருந்தாலும் நான் உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும், நடிகர் அஜித், விஜயகாந்தின் இறப்புக்கு வராததை விட ஃபோனில் கூட பிரேமலதாவை அழைத்து அவர் தூக்கம் விசாரிக்கவில்லை என்பது தான் உண்மை என்று அவர் கூறியிருக்கிறார்.

ஹேமா கமிட்டி அறிக்கை.. ஒட்டுமொத்த கேரள திரையுலகை குறை சொல்வது தப்பு - கொந்தளித்த சீரும் பார்வதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios