பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக வெளியான புரோமோவில், ஆரி பாலாஜியை பார்த்து நீ ஆம்பள பையன் தானே என கேட்டபோது தனக்கு கோவம் வந்தது. ஆனால் கோவப்படமாட்டேன் என பிக்பாஸ் கேமராவை பார்த்து பாலாஜி கூறுவது தான் மூன்றாவது புரோமோவில் வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவில்... பாலாஜி அவரிடம் மிகவும் நேர்மையாக கெஞ்சி கூப்பிட்டோம்... இங்க வாங்க சேர்ந்து விளையாடலாம் என்று, ஆனால் அவர் அந்த பொருட்களை நடுவில் போட்டிருக்க கூடாது, ஓடி விளையாடுவது தான் கேம் என சொல்கிறார்.

கமல் சார் தன்னிடம் தன்னுடைய தவறுகளை கூறியபோது அதனை ஏற்று கொள்கிறேன் என கூறி, அவரிடம் மன்னிப்பும் கேட்டு விட்டேன். இருப்பினும் வீட்டில் எது செய்தாலும் தவறு என சொன்னால் எப்படி. ஆம்பள பையன்னு கேட்டது தப்பு. இப்படி கேட்டால் யாருக்குத்தான் கோவம் வராது என தன்னுடைய ஆதங்கத்தை கேமரா முன் கொட்டுகிறார்.

இருப்பினும் நான் இனி கோபப்படவில்லை என கூறுகிறார். பாலாஜியிடம் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. அதே நேரத்தில், மற்ற போட்டியாளர்களை விட ஆரிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் உள்ளதை உணர்ந்து முன்பை விட கொஞ்சம் ஓவராக பிரச்சனை செய்கிறாரோ என்றும் யோசிக்க வைத்துள்ளது இந்த புரோமோ...