இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், பாலாஜி அழுது கொண்டே பிக்பாஸ் அறையில் பேசுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் தான் ஃபிரீஸ் டாஸ்க் நடந்து முடிந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களின் உறவினர்கள், பெற்றோர்கள், சகோதரர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை ஊக்குவித்து விட்டு சென்றனர். குறிப்பாக அனைவருமே, ஆரிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால், அவர் செய்வது அனைவருக்குமே நியாயமாக படுவதால், அவரிடம் சண்டை போட வேண்டாம் என அழுத்தம் திருத்தமாக கூறி சென்றனர்.
ஆனாலும் ரம்யா, பாலாஜி, ரியோ ஆகிய மூன்று பேரும் மாறி மாறி ஆரியை நேற்று வம்பிழுந்த காட்சிகளும், ஆரியின் தரப்பில் இருந்து அவரது பொறுமையை பாராட்டி, மற்றவர்களின் குறைபாடுகளையும் கமல் கேட்டறிந்தார். சந்தடி சாக்கில்... பாலாஜி தலையணையை தூக்கி வீசியது, மைக்கை கழட்டி வீசியது என அனைத்தையும் சொல்லி காட்டினார். மேலும் ஆரி தன்னை வேலை செய்யவில்லை என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமலிடம் கூறினார் .
பின்னர் மீண்டும் ஆரியிடம் வந்து, கோவத்தில் வந்த வார்த்தைகள் தான் இவை. மனதில் வைத்து கொள்ளவேண்டாம் என மன்னிப்பு கேட்டார். ஆரியும் அவரது மன்னிப்பை கட்டி அனைத்து ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், பாலாஜி அழுது கொண்டே பிக்பாஸ் அறையில் பேசுகிறார். அதில் கோவம் தான் என்னுடைய இயற்க்கை குணம், அதை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கிறேன். அது தப்பு, இது தப்பு என சொல்லி கொடுக்க என்னுடைய வாழ்க்கையில் யாரும் இல்லை. மக்களாக இருந்தாலும், கமல் சார்ராக இருந்தாலும் தவறை சுட்டி காட்டினால் அதனை சரி செய்து கொள்ளத்தான் எனக்கு தெரியும் என அழுதபடி கூறுகிறார்.
கமல் ஷோவில், பாலாஜி நேரடியாக பேசும் காட்சியை காட்டாமல்... பிக்பாஸ் அறையில் பாலா பேசிய காட்சியை காட்டியுள்ளதால் ஒருவேளை பாலாஜி வெளியேற்றப்பட்டாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ இதோ..
#BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/QFaAQ72jCq
— Vijay Television (@vijaytelevision) January 3, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 3, 2021, 10:55 AM IST