நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2 மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

தினமும் இரவு 9 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்காக குடும்பமே  விஜய் டிவி முன்பாக அமர்ந்து விடுகிறது

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, வாரம் தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் நேற்று தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்

அப்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நித்யாவை  வரவேற்பதற்கு, அவருடைய மகள் வந்து இருந்தார். பின்னர் கமல் முன்பு நின்றுக்கொண்டு நித்யா மற்றும் நித்யாவின் மகள் கௌஷிகா, தாடி  பாலாஜியுடன் பேசினார்கள்.

8 மாதங்கள் கழித்து தன் பார்த்த பாலாஜி கதறி அழுதார்...துக்கம் தாங்கமால், அனைவரும் முன் அழுதார்...பின்னர் பாலாஜி தன் மகளுடன் சிறிது நேரம் உரையாடினார்....

அதன் பின்னர், தன் மகள் மற்றும் நித்யாவை பார்த்து ஐ லவ் யூ போத் என தெரிவித்து இருந்தார். அதற்கு பதில் அளித்த மகள், நானும் ஐ லவ் யூ டேட் என தெரிவிக்க...அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்தது.

பின்னர், தன் மகளை பார்த்து பாலாஜி, "கவலை படதே உனக்கு அம்மா இருக்காங்க.. அப்பா இருக்கேன்..எப்போதுமே உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்'...என தெரிவித்து இருந்தார்

பின்னர், என்னுடைய அப்பா சார்பாக தன் மகளை வாழ்த்தி அனுப்பி வையுங்கள் என கமலிடம் பாலாஜி கேட்க.... பாலாஜியின் மகளை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டார் கமல்

இதனை கண்டு மீண்டும் மனமுருகி நன்றி தெரிவித்துக்கொண்டார் பாலாஜி...ஆக மொத்தத்தில் நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் எமோஷன்தான் என கூறும் அளவிற்கு இருந்தது.