பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் யாஷியாகை காதலிப்பதாக கூறியதில் இருந்தே அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் பாலாஜி. ஏற்கனவே வெளியில் ஒரு பொண்ண காதலிக்கிற, இப்போ இங்க யாஷிகாவை காதலிக்கிறேன்னு சொல்லுற என நேரடியாகவே மஹத்தின் முன்னிலையில் அவரிடம் கேள்விகேட்ட பாலாஜி தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் பிரமோவிலும் மஹத்தை தான் திட்டி இருக்கிறார்.

ஏதாவது தப்பை நாம தெரிஞ்சே செஞ்சிட்டு பிறகு மனநிலை சரி இல்லாம செஞ்சிட்டேன். எனக்கு மனநலமருத்துவரை பார்க்கனும் அப்படி சொல்லுறது எப்படி சரியாகும். என்பதை தான் பாலாஜி இந்த பிரமோவில் பின்வருமாறு கேட்டிருக்கிறார். அப்போ நான் கத்தி எடுத்து குத்திட்டு எனக்கு சைக்கியாட்ரிஸ்ட பாக்கனும்னு சொன்னா சரியாகிடுமா? என்று மும்தாஜ் மற்றும் டேனி முன்னிலையில் கேட்கிறார் பாலாஜி.

மஹத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்த நபர்களில் பாலாஜியும் ஒருவர் ஆனால் அவரே கோபப்படும்படி நடந்துகொண்டிருக்கிறார் மஹத். அது அவர் தனிப்பட்ட விஷயம் தான் என்றாலும் இப்போது அனைவரின் பார்வைக்கு வரும் போது , எது சரி எது தவறு என்று விமர்சிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி விடுகிறது.
 இதில் டேனி வேறு எனக்கு பயமா இருக்கு எங்க தூங்கும் போது வந்து கடிச்சிடுவாளோனு, என கூறி இருக்கிறார். 

இதில் அவர் அவள் என்று கூறுவது ஐஸ்வர்யாவையா என்று தெரியவில்லை. அதே சமயம் பிக் பாஸ் வீடு ஒன்றும் மனநிலை சரியில்லாதவர்களுக்கு மருத்துவம் செய்யும் இடம் கிடையாது என்று தெரிவித்திருக்கின்றனர் பாலாஜி, மும்தாஜ், டேனி ஆகிய மூவரும்.


இந்த மூவரும் புறணி பேசியதில் எது சரியோ இல்லையோ .ஒன்று மட்டும் தான் ரொம்ப சரி. இது மனநிலை சரியில்லாமல் ஆக்கும் இடமே தவிர, மனநிலையை சரி செய்யும் இடம் இல்லவே இல்லை என இந்த பிரமோவை பார்த்து கலாய்த்திருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.