bala talks about liquor and cigerette

அரசே மதுவை விற்பனை செய்வதும், சிகரெட் விற்க அனுமதி அளிப்பதும் இந்த நாட்டுக்கு பெருத்த அவமானம் என இயக்குநர் பாலா தெரிவித்தார்.

புகையிலை ஒழிப்ப தினத்தையொட்டி, புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவோம் என்ற நோக்கத்துடன் ஒரு மாதத்தில் புகையிலைப் பழக்கத்தை வைவிடுவோரை கவுரவிக்கும் விதமாக பிரபலங்களுடன் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி சென்னை அடையாறு கேன்சர் இல்லத்தில் நடைபெற்றது.

ஒரு மாதத்தில் கவுன்சீலிங் மற்றும் நிகோடின் பரிசோதனை போன்ற தொடர் கண்காணிப்பில் இருந்த 39 பேர் தற்போது புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர்.

இவர்களை பாராட்டும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பாலா, அரசே மது விற்பதும், புகையிலை விற்க அனுமதி அளிப்பதும் இந்த நாட்டுக்கே அவமானம் என தெரிவித்தார்.

மது, சிகரெட் போன்ற பழக்கங்களில் இருந்து விடுபட இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், மது , சிகரெட் போன்றவற்றை தடை செய்வதே மிகச் சிறந்ததது எனவும் பாலா தெரிவித்தார்.