பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதல் பிரீஸ் டாஸ்க் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று, ஷிவானியின் அம்மா உள்ளே வந்த காட்சிகள் முதல் புரோமோவிலே காண்பிக்கப்பட்டது. வந்ததும் மகளை கட்டி பிடித்து பாசத்தை பரிமாறிய அவரது அம்மா, நீ இங்க செய்யுறது எல்லாம் வெளியில தெரியாதுன்னு நினைக்கிறியா என வெளுத்து வாங்கி விட்டு சென்றுள்ளார்.

அவர் சென்ற பின்னர், ஷிவானி  அவரது அம்மாவிடம் திட்டு வாங்க காரணம் நான் தான் என பீல் செய்து இரண்டாவது புரோமோவில் பாலா அழ, அதற்க்கு ரம்யா ஷிவானியின் அம்மா அவரிடம் பேசியதை அனைத்தும் ரிப்பீட் செய்துகொண்டிருந்தார்.

ஷிவானியின் பெற்றோரை தொடர்ந்து அடுத்ததாக பாலாவை பார்க்க அவரது நண்பர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகிறார். இவரை பார்த்த சந்தோஷத்தில் உணர்ச்சிவசம் பொங்க தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாலா, பின்னர் உனக்காக பிரீசில் இருந்து வெளியே வந்து விட்டேனே என சிரித்து கொண்டே கலாய்க்கிறார்.

பின்னர் தன்னுடைய பிக்பாஸ் பேமிலியை தன்னுடைய நண்பனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். பாலாவை தனியாக அழைத்து பேசும் அவரது நண்பர், இதுவரை நீ எதுவும் தவறாக விளையாடவில்லை எனவே இப்படியே விளையாடு என பாலாவை ஊக்குவிக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த புரோமோ இதோ...