பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாள் முதலே, அதிகாரம் செய்து வரும் அர்ச்சனா தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவியாக மாறி விட்டதால் ஓவராக அட்ராசிட்டி செய்து வருகிறார். பாலா சாதாரணமாக சொன்ன வார்த்தையை கூட குதர்க்கமாக புரிந்து கொண்டு, பாலாவிடம் ரியோ எகிறி குதித்து நேற்றைய தினம் சண்டை போட்டார்.

"நான் தலைவர் ஆனதும், எல்லோரையும் அம்மி அரைக்க விடுகிறேன்" என பாலா கூறியது பெரிய தவறாக மக்களுக்கு தெரியவில்லை. அதே நேரத்தில், உடல் அசதியில் தூங்கி கொண்டிருந்த பாலாவை எழுப்பி வேலை வாங்கியது தான் அந்த இடத்தில் தவறாக பார்க்கப்பட்டது.

மேலும் அர்ச்சனா பாலா தூங்கி கொண்டிருப்பது போல் நடித்தார் என்கிற வார்த்தையையும் விட்டு சிக்கினார். இதை தொடர்ந்து இன்றும் இவர்களுடைய பிரச்சனை துவங்குகிறது. எட்டி பக்க முடியுது வந்து வேலை செய்ய முடியவில்லையா என தான் கூறியதை கூட மறுத்து பேசுகிறார் அர்ச்சனா.

பின்னர் பாலா பேசும் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் கேப்டன் பண்ணுனது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் கேப்டனை தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார். பின்னர் கிண்டலான ஆக்ஷன் செய்து பாலாவை வெறுப்பேற்றி, அடுத்த நான்கு நாட்களுக்கு நான் தான் கேப்டன், பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தான் ஆகவேண்டும் என அதிகாரத்தோடு அர்ச்சனா சொல்கிறார்.

அப்போது சரி என அமைதியாக கேட்டு கொண்ட பாலா, பின்னர் தேம்பி தேம்பி அழும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 அந்த புரோமோ இதோ...