இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் கடைசி பாடல் காட்சி ஒன்று ஸ்வீஸில் எடுக்கப்பட்டு வருகின்றது, படக்குழுவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது.

இந்த படத்தின் பாடல் காட்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது யாரோ ஒரு ரசிகர் அந்த பாடல் காட்சியின் வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டார்.

இதை தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவ வருகிறது, இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாம்.