உலகம் முழுவதும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது மட்டுமின்றி, வசூலிலும் சாதனை புரிந்த எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படைப்பான 'பாகுபலி 2' திரைப்படம் மூன்று வாரங்கள் கடந்தும் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லாமல் வெற்றிநடை போடுகிறது.

 ஏற்கனவே இரண்டு வாரம் வசூலில் சீறி பாய்ந்த பாகுபலி, தற்போது மூன்றாவது வார இறுதியில் வேகம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 19 திரையரங்குகளில் 412 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,46,71,330 வசூலித்துள்ளது. மூன்றாவது வாரத்திலும் பாகுபலியை பார்க்க 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் நிரம்பியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் இந்த படம் கடந்த மாதம் 28ஆம் தேதியில் இருந்து நேற்று வரை ரூ.11,71,32,430 வசூல் செய்து சென்னையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் மூன்று மொழிகளின் மொத்த வசூல் ரூ.13,44,17,810 என்பது குறிப்பிடத்தக்கது.