bahubali triler

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருக்கும், 'பாகுபலி 2' படத்தின் ட்ரைலர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்திய அளவில் அதிக நபர்கள் பார்த்த டிரைலர் என்ற சாதனையை இந்த படத்தின் டிரைலர் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உலக அளவிலும் புதிய சாதனை செய்துள்ளது.

24 மணி நேரத்தில் உலக அளவில் அதிக பேர்களால் பார்க்கப்பட்ட வீடியோ பட்டியலில் 'பாகுபலி 2' டிரைலர் 11வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

தற்போது வெளியாகி இருக்கும், ட்ரைலருக்கே இப்படி ஒரு வரவேற்பு என்றால், படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என... இந்திய திரையுலகத்தை சேர்ந்த பலர் மிரண்டு போய் உள்ளார்களாம் பாகுபலியில் சாதனையை பார்த்து.