தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் கொரோனா பாதிப்பிற்கு, தங்களால் முடிந்த நிதி உதவியை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களின் நிதிக்கும், பிரதமரின் நிதிக்கும் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே பிரபல நடிகர், பவன் கல்யாண் ஆந்திர மாற்று தெலுங்கானா முதல்வர்கள் நிதிக்கு ஒரு கோடியும், பிரதமரின் நிதிக்கு 1 கோடியையும் வழங்கினார்.

இவரை தொடர்ந்து இவருடைய சகோதரர்  சிரஞ்சீவி ரூ.1 கோடியும், அவருடைய மகன், ராம் சரண் தேஜா 70 லட்சமும், பிரபல நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி என  ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர் நிதிக்கு கொடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து 'பாகுபலி' நாயகன் பிரபாஸ்...   தெலுங்கானா, மற்றும் ஆந்திர மாநில முதல்வர்கள் நிதிக்கு  ரூ.1 கோடியும்,  பிரதமரின் நிதிக்கு 3 கோடியும் கொடுத்துள்ளார்.

இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.