bahubali actor arrest
இயக்குனர் ராஜமௌலி இயக்கி மிகப் பெரிய வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில், பிரபாஸுக்கு வளர்ப்புத் தந்தையாக நடித்திருந்தவர் நடிகர் வெங்கடேச பிரசாத். சிறு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் பாகுபலி படத்திற்குப் பிறகு பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடத்தில் ஒரு பெண் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்துள்ளார். ஆனால் வெங்கடேச பிரசாத் அந்தப் பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி அவருடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்த்து வந்துள்ளார்.

மேலும் இந்தப் பெண், தான் இரண்டு முறை கர்ப்பத்தைக் கலைத்துள்ளதாகவும். தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக இவர் துன்புறுத்தி வருவதோடு இவர்க்கு போதை மருந்துக் கடத்தல் கும்பலோடு தொடர்புள்ளதாகக் கூறி பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேச பிரசாத்தைக் கைது செய்த போலீசார் இவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
