bahubali 2 movie relese in imax



உலக மக்கள் அனைவருடைய  எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது "பாகுபலி 2" படம். இந்த படத்தின் முதல் பாகமே  பிரமாண்ட சாதனை படைத்துள்ளதால் இரண்டாம் பாகம் முந்தய சாதனையை முறியடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம், வெளியான பாகுபலி படத்தின் ட்ரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 5 கோடி பேரால் சமூக வலைதளத்தில் பார்க்கப்பட்டு, உலக அளவில் 11வது இடத்தை பிடித்தும், இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தும் சாதனை படைத்தது.

தற்போது மேலும் இந்த படத்தை மெருகேற்றும் வைகையில், ஐமேக்ஸ் திரையரங்கத்திற்கு ஏற்றவாறு தயார் செய்து வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

இதற்கு முன், "தூம்4", "பேங் பேங்" ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது என்பதும் தென்னிந்திய படமான "பாகுபலி 2"முதல் முறையாக திரையிட படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் "பாகுபலி 2" திரைப்படத்தை ஐமேக்ஸ் பதிப்பில் திரையிடப்படுவதை பார்க்க ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் , இது படத்தின் பிரம்மாண்டத்தையும்  ஆன்மாவை இன்னும் மேன்மைப்படுத்தும்  என தெரிவித்துள்ளார்.