தனது கணவர் விசாகனுடன் தேனிலவு கொண்டாடி வரும் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரஜினியின் மகள் செளந்தர்யாவுக்கு கடுமையான கண்டன கமெண்டுகள் குவிந்துவருகின்றன. ஆனாலும் அந்தப் பதிவை அவர் நீக்கவில்லை.

கடந்த இரு தினங்களுக்கு தனது தேனிலவுக்காக கணவர் விசாகனுடன் ஐலந்து தீவுக்குச் சென்றார் செளந்தர்யா. அங்கிருந்தபடியே தனது உற்சாகத்தை மக்களிடம் பகிர்ந்துகொள்வதற்காக ‘அடிக்குது குளிரு’...ஹனிமூன் சந்தோஷம்....உற்சாகம்...மிஸ் யூ வேத்’ என்று குட்டி குட்டியாய் ட்விட் போட்டிருந்தார்.

இந்த ட்விட்டுக்கு ஓரிருவர் வாழ்த்துகள் போட்டிருந்தாலும் பெரும்பாலானோர் மிகவும் கொச்சையான வார்த்தைகளில் அவர்கள் இருவரையும் திட்டி பதில் கமெண்ட் போட்டனர். ‘இங்கே 40 ராணுவ வீரர்கள் பலியாகி நாடே சோகத்துல மிதக்கிறப்ப, உங்களுக்கு ஹனிமூன் கேக்குதா? என்ற பொருள்படவே பெரும்பாலான கமெண்டுகள் இருக்கின்றன. இதோ இரண்டு சாம்பிள்கள்...

...நாட்டுல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு?
நீ ஹனிமூன் கொண்டாடு.. அது உன்னோட வாழ்க்கை.. ஆனா நாட்டுல இந்த மாதிரி ஒரு துயர சம்பவம் நடந்திருக்கப்போ டிவிட்டர்ல உங்க ஹனிமூன் ட்ரிப்பை படமா போட்டு சந்தோஷப்பட்றது நல்லாயில்ல. அப்புறம் ஆளாளாளுக்கு கண்டபடி பேசத்தான் செய்வாங்க..

...இதல்லாம் எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா, உங்கள Honeymoon போக வேணாம்னு சொல்லல, இத ஏன் வெளிய சொல்றீங்க 😏 இங்க என்ன பிரச்சினை நடக்குதுனு கூடவா தெரியாது...