6 அடிக்கு மேல் உயரம், 60 பேரை கூட அடிக்கும் பலம் என ராணா மிரட்டினாலும், அவரின் வலது கண்ணால் எதையும் பார்க்க முடியாது என தகவல்கள் கிடைத்துள்ளன.

SSராஜமௌலி இயக்கத்தில் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாக சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் பாகுபலி 2  பிரமாண்ட வெற்றிக்கு ராணாவின் முரட்டுத்தனமான வில்லன் நடிப்பும் இப்படத்திற்கு வலுசேர்க்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாகுபலி 2 படத்தில் தனது அசுரத்தனமான நடிப்பை கொட்டியுள்ள ராணா டகுபதிக்கு உலகமெங்கிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்ற இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராணா தன்னை பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பாகுபலி 2 திரைப்படத்தின் முன்னோட்டம் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ராணா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் படத்தை பற்றிய பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

அப்போது கேள்விகள் கேட்ட தொகுப்பாளினியிடம் ராணா பதிலளிக்கையில், “நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். எனக்கு வலது கண் தெரியாது. நான் என்னுடைய இடது கண் மூலமாக தான் பார்க்கிறேன். நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் இந்த கண் வேறோவருவர் இறப்பதற்கு முன் எனக்கு தானம் செய்தது. இடது கண்ணை மூடி விட்டால் என்னால் யாரையும் பார்க்கமுடியாது.
இவ்வாறு கூறினார்.

இரண்டு கண்களுமே தெரியாத இவருக்கு, ஒரு பக்கத்தின் கண்ணை மட்டும் யாரிடமோ தானமாக பெற்று கண் பார்வை வர வைத்துள்ளனர் என உருக்கமான தகவல்கள் ரசிகர்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.