Asianet News TamilAsianet News Tamil

‘ஜென்டில்மேன் 2’ முதல் அப்டேட்டே பிரம்மாண்டமா இருக்கே.... பாகுபலி பட பிரபலத்தை தட்டித்தூக்கிய கே.டி.குஞ்சுமோன்

‘ஜென்டில்மேன் 2’ படத்திற்காக இயக்குனரை தேடும் பணியில் இறங்கி உள்ளார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை கையாளும் திறன் கொண்டவரை அவர் தேடி வருகிறாராம். 

Baahubali and RRR fame Maragathamani to compose the music for Gentleman 2
Author
Tamil Nadu, First Published Jan 23, 2022, 12:18 PM IST

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா, சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜென்டில்மேன்'. கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாகவே ஷங்கர் இயக்குநராக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படத்தில் அர்ஜுன் திருடனாக தோன்றி செம மாஸ் கட்டியிருந்தார்..ஏஆர் ரகுமான் இசையில் ஒவ்வொரு பாடல்களும் ஹிட் அடித்தன.. அதோடு கவுண்டமணி, செந்தில் காம்பினேஷன் காமெடிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

Baahubali and RRR fame Maragathamani to compose the music for Gentleman 2

1993-ல் நல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது தயாராக உள்ளது. இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தான் தயாரிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது. மேலும் முதல் பாகத்தில் பணியாற்றிய ஷங்கர், அர்ஜுன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர்களுக்கு பதில் புதிய கூட்டணியில் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். முதலாவதாக இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்த மரகதமணி, ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

Baahubali and RRR fame Maragathamani to compose the music for Gentleman 2

இதையடுத்து இயக்குனரை தேடும் பணியில் இறங்கி உள்ளார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை கையாளும் திறன் கொண்டவரை அவர் தேடி வருகிறாராம். இயக்குனர் கமிட்டானதும் பிரபலமான நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் தயாராக உள்ளதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios