Asianet News TamilAsianet News Tamil

அஜீத், விஜய் சேதுபதி, விஜய், தனுஷ், விஷால் படத் தயாரிப்பாளர் திடீர் மரணம்...

அஜீத்தின் ‘வீரம்’ சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட ‘சங்கத்தமிழன்’ படங்களின் தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி சென்னையில் இன்று மதியம் 1 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 75.
 

b.vengarramareddy passes away
Author
Chennai, First Published May 12, 2019, 4:00 PM IST

அஜீத்தின் ‘வீரம்’ சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட ‘சங்கத்தமிழன்’ படங்களின் தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி சென்னையில் இன்று மதியம் 1 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 75.b.vengarramareddy passes away

விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ்  பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்  B.வெங்கட்ராம ரெட்டி  இன்று மதியம் 1  மணியளவில்  இயற்கை  எய்தினார் . அவருக்கு  வயது 75. அவரது மனைவி பெயர்  B.பாரதிரெட்டி . இவருக்கு ஒரு மகனும் , இரு மகள்களும் உள்ளனர் .மகன் ராஜேஷ்ரெட்டி, மகள்கள் ஆராதனா ரெட்டி & அர்ச்சனா ரெட்டி. 

இவர்  ’தாமிரபரணி’ , ’படிக்காதவன்’, ’வேங்கை’ , ’வீரம்’ , ’பைரவா’ ஆகிய 5   படங்களை  தயாரித்துள்ளார் .  விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து சில தினங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்ட இவரது 6வது படமான ’சங்கத் தமிழன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.b.vengarramareddy passes away

இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7 .30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது .

Follow Us:
Download App:
  • android
  • ios