சன் டிவி தொலைக்காட்சியில், கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் 'அழகு'. அழகம்மையாக வரும் நடிகை ரேவதி தான் இந்த சீரியலின் ஆணி வேர். இவருடைய கணவர் பழனிச்சாமி என்கிற வேடத்தில் நடிகர் தலைவாசல் விஜய் நடித்திருந்தார். மேலும் சுருதி ராஜ், விஜே சங்கீதா, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில்இயக்குனர் வி.சி.ரவி என்பவர் இயக்கி வந்த இந்த சீரியல், பின் ஐந்து இயக்குனர்களிடம் சென்றது. தற்போது ராமசந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். 

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில், எதிர்பாராத பல மாற்றங்கள் வந்தது. மேலும் கொரோனா பிரச்சனை காரணமாக, அனைத்து சீரியல் பணிகளும் நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் பல்வேறு, நிபந்தனைகளுக்கு மத்தியில், நடத்தப்பட்டு வருகிறது. 

அதே போல் அழகு சீரியல் பணிகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் திடீர் என என்ன ஆனது என தெரியவில்லை, சீரியலில் விரைந்து முடிக்கும் முயற்சியில் சீரியல் குழுவினர் உள்ளதாக, இந்த சீரியலில் நடித்து வரும்,  அவினாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து, அதில், அழகு சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் பகிர்ந்து சூப்பர் ஹிட் அழகு சீரியல் கிளைமேக்ஸ் விரைவில் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில் இந்த சீரியல் முடிய உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் அழகு சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.