atli join hands with vijay once again

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மெர்சல் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் படத்தை அட்லி இயக்கவுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு திரைக்கதை எழுதும் பணியில் பிஸியாக இருக்கிறாராம் அட்லி.

இந்த நிலையில், "ஆளப்போறான் தமிழன்" என்ற டைட்டிலை அட்லி பதிவு செய்துள்ளதாகவும், அந்தப் படத் தலைப்பை விஜய்யின் அடுத்த படத்திற்கு எடுத்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அட்லியின் அடுத்த படமான ஆளப்போறான் தமிழனில் விஜய்தான் ஹீரோவாக நடிக்கயிருக்கும் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மூன்று ஹீரோக்கள் படத்திற்கான திரைக்கதையையும் அட்லி எழுதி வருவதாகவும், இப்படத்திற்கு பிறகு விஜய் படத்தை இயக்குவார் என்றும் தெரிகிறது.

மெர்சலுக்கு முன்னரே தெறி படத்தை விஜய்யை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தவர் அட்லி. மெர்சல் படமும் பெரிய வசூல் பெற்றது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.