நடிகையர் திலகம் சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு, தமிழில்  ”நடிகையர் திலகம்” என்ற பெயரிலும் , தெலுங்கில் ”மகாநடி”  என்ற பெயரிலும் ரிலீசாகி நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சாவித்திரி தேவியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

பிரபல இயக்குனர் அட்லீயும் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படத்தை பாராட்டி தன் கருத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் பழம் பெரும் நடிகை சாவித்திரி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை திரையில் காட்டியிருக்கும் இந்த ”மகாநட” திரைப்படம் அற்புதம்.

#Mahanathi classic ,emotional inspirational bio epic of savithri Amma @KeerthyOfficial brought back the legendary actress hats off espl Mayabazar dance @Samanthaprabhu2 Thambi u rocked , congrats to whole team & Spl Thx to @VyjayanthiFilms for this unforgettable classic ... pic.twitter.com/2xvylpqufy

— atlee (@Atlee_dir) May 9, 2018

அந்த பிரம்மாண்ட நடிகையின் வாழ்க்கையை அப்படியே மீட்டு கண்முன் திரையிடுகிறது இந்த திரைப்படம் என கூறியிருக்கிறார். குறிப்பாக மாயாபஜார் நடனத்தினை காட்சிப்படுத்திய விதம் பாராட்டுதலுக்குரியது என தெரிவித்திருக்கிறார். வைஜெயந்தி ஃபிலிம்ஸ், கீர்த்தி சுரேஷ் , சமந்தா என ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் இந்த மறக்கமுடியா திரைக்காவியத்திற்காக தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார் பிரபல இயக்குனர் அட்லீ.