நடிகை நயன்தாரா - ஆர்யா நடித்த 'ராஜா ராணி'  படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், இளம் இயக்குனர்களின் ஒருவரான அட்லீ. படங்கள் இயக்குவதற்கு முன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார். முதல் படத்திலேயே இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் என்பதை நிரூபித்தார்.

இரண்டாவதாக நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய 'தெறி' திரைப்படமும் சூப் டூப்பர் ஹிட் ஆனது. அடுத்தடுத்து, மெர்சல்,பிகில் என தற்போது மூன்றாவது முறையாக விஜய் படத்தை இயக்கி வருகிறார்.  

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ப்ரியா திருமணத்திற்கு பின் எந்த படங்களிலும் நடிக்கா விட்டாலும், அடிக்கடி கணவருடன் ஷூட்டிங் ஸ்பாட் சென்று, அவருக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இந்நிலையிவ் இவர்கள் செய்துள்ள விஷயம் தான் நெட்டிசன்களை இது கொஞ்சம் ஓவரா தெரியலையா என விமர்சிக்க வைத்துள்ளது. அது என்னவென்றால், 'இவர்கள் வீட்டில் ஆசையாக வளர்த்து வரும், பெக்கி நாய் குட்டிக்கு கேக் வெட்டி அதன் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்". அதன் புகைப்படத்தையும் அட்லீ - ப்ரியா இருவரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படத்தை பார்த்து, நாய் பிரியர்கள், சூப்பர், கியூட், என கொஞ்சி வந்தாலும், சிலர் இது கொஞ்சம் ஓவர் என கூறி வருகிறார்கள்.