'அர்ஜுன் ரெட்டி' படத்தின்  தமிழ் ரீமேக் ஏற்கனவே 'வர்மா' என்கிற பெயரில் இயக்கப்பட்டு, எதிர்பார்த்த அளவிற்கு இயக்குனர் பாலா இயக்கவில்லை என கூறி, தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை மற்றொரு இயக்குனரை வைத்து இயக்க உள்ளதாக அறிவித்தது. 

தற்போது 'ஆதித்ய வர்மா' என்ற புதிய பெயரில் இப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு கைவிட பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, பட நிறுவனம், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தற்போது படக்குழுவினர் பாடல் காட்சி படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு, தலத்தில் எடுத்து புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், முதல் முறையாக விக்ரம் மகன் துருவ்... 'ஆதித்ய வர்மா' படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் பணித்தா சந்துவுடன் ஜோடியாக ஹாய்யாக அமர்ந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

முதல் முறையாக விக்ரம் மகன் துருவ் கதாநாயகியுடன் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இந்தி ரீமேக் டிரைலரும் வெளியாகிவிட்டதால், தமிழ் ரீமேக் படப்பிடிப்பை முடிப்பதில் படு தீவிரம் காட்டி வருகின்றனர் படக்குழுவினர்.