கடந்த 2017 ஆம் ஆண்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமான 'அருவி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். 

இவர் ஏற்கனவே 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து விட்டார். 

இதனால் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. பல இயக்குனர்கள் இவரை தேடி சென்று கதை கூறிய போதிலும், தன்னுடைய மனதிற்கு பிடித்த கதையில் தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார். 

இதனால் 'அருவி' படத்தை தொடர்ந்து எந்த படத்திலும், அதிதி பாலன் கமிட் ஆகவில்லை. இந்நிலையில் 2  வருடம் கழித்து மலையாளத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

"ஜாக் அண்ட் ஜில்" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி பாலன்.  மேலும்  இந்த படத்தில், நடிகை மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.