கடந்த சில மாதங்களாகவே கோடம்பாக்கத்தில் நடமாடி வந்த, பெரிய இடத்துப் பிள்ளைகளின்  ஹாட்டஸ்ட் காதல் கிசுகிசு ஒன்றுக்கு விரைவில் நிச்சயதார்த்தமும் மூன்று முடிச்சும் நடைபெறவிருக்கிறது. இவர்கள்து திருமணம் தளபதி விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் வாரிசு நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் ’விஜய் 64’ படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கியிருந்தார் சினேகா. அப்படம் மிகவும் சுமாராகவே ஓடிய நிலையில் அடுத்து அவர் படம் எதுவும் இயக்கவில்லை.

சிநேகாவும்  அதர்வா தம்பி ஆகாஷும் லயோலா கல்லூரியில்  ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது.இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதல் கைகூடத் தாமதம் ஆகியிருக்கிறது. இன்னொரு பக்கம், அண்ணனுக்குத் திருமணம் நடந்த பிறகு நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று அதர்வாவின் தம்பி ஆகாஷ் சொன்னதாலும் தாமதமானதாம்.

இச்செய்தி அவ்வப்போது வலைதள ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு  வந்த நிலையில் தற்போது இரு வீட்டாரின் சம்மதமும் காதலர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதையொட்டி தன் வருங்காலக் கணவருக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள கார் பரிசளித்திருக்கிறாராம் சினேகா. மிக விரைவில், அதாவது ‘தளபதி 64’டெல்லி ஷெட்யூல் முடிந்து விஜய் சென்னை திரும்பும் சமயத்தில் அவர்கள் இருவருக்கும் விஜய் தலைமையில் நிச்சயதார்த்தமும் திருமணமும் நடைபெற உள்ளதாம்.