சமீபத்தில் ரிலீஸான மலையாளப்படமான ‘லவ் டிராமா ஆக்‌ஷன்’படத்துக்கு வெறும் 40 லட்சம் மட்டுமே சம்பளம் பெற்ருக்கொண்டு நடித்த நயன்தாரா புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க ஆறுமுதல் ஏழு கோடி வரை சம்பளம் கேட்பதால் அவருக்குப் புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்று தெரிகிறது.

தமிழில் கடைசியாக ரஜினியின் ‘தர்பார்’விஜயின் ‘பிகில்’படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நயன்தாரா அப்படங்களில் தலா மூன்று கோடி வரை சம்பளம் பெற்றிருந்தார். அதே சமயம் சிரஞ்சீவியின் மெகா பட்ஜெட் படமான ‘நரசிம்மா ஷைரா ரெட்டி’படத்துக்கு சுமார் 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதையொட்டி தமிழிலும் தனது சம்பளத்தை உயர்த்த நினைத்த நயன் புதிதாக தன்னைத் தொடர்புகொள்ளும் தயாரிப்பாளர்களிடம் சிரஞ்சீவி படத்தின் சம்பளத்தைச் சொல்லி அதே தொகையைக் கேட்பதாகத் தெரிகிறது.

ஆனால் துரதிர்ஷடவசமாக தமிழில் தொடர்ச்சியாக ‘ஐரா’,’மிஸ்டர் லோக்கல்’,’கொலையுதிர்காலம்’ ஆகிய மூன்று படங்களுமே படு தோல்வி அடைந்த படங்கள் என்பதால் புதிய படங்களில் அவரைக் கமிட் பண்ணவே தயங்குகின்றனர். இனி ‘தர்பார்’,’பிகில்’படங்களுக்கு முன் நயன் தாரா நினைக்கும் சம்பளத்தை ரவுடி பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ள அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஒருவரால் மட்டுமே தரமுடியும் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.